Month: August 2024

பாப்பாரப்பட்டி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில் விவசாய விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் நிலக்கடலை மஞ்சள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள…

தர்மபுரியில் 7.5% உள் ஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் படித்த ஏழை வீட்டில் 3 டாக்டர்கள்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாகலஹள்ளி ஊராட்சி தண்டுகாரம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கொளந்தை விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாதம்மாள் இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் என இரண்டு மகன்களும் உள்ளனர். கொளந்தை…

பண்டஅள்ளி ஊராட்சியில்பொறுப்பு தலைவரின் மகன் மோட்டார் மற்றும் பைப்புகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் புகார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்க்கான் கொட்டை பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 15ஆவது நிதி குழு மானியத்தில் 2020-21 ஆம் ஆண்டு 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட…

கூத்துப்பாடியில் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறியவர்களுக்கு முதியவர்களுக்கு கொடுத்து மலர் தூவி மரியாதை. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி கிராமத்தில் இன்று பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 72 ஆவது பிறந்தநாள்…

அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி ஆக-21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக…

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த சக ஆசிரியரை அடியாட்கள் வைத்து தாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ரமணி ராஜன் என்பவர் தலைமை…

தர்மபுரி உழவர் சந்தையில் 12 லட்சத்திற்கு காய்கறிகள்,பழங்கள் விற்பனை.

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் 29 மெட்ரிக் டன் காய்கறிகள், 2000 கிலோ பழங்கள்,…

எண்ணெய் விதைப்பயிர்கள் செயலாக்கம் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

பென்னாகரம் அருகே கோடுபட்டி கிராமத்தில் எண்ணெய் விதை பயிர்கள் செயலாக்கம் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர்.இதில் வேளாண்மை அறிவியல் நிலையம்…

காரில் குட்கா மூட்டைகளை கடத்தி சென்ற இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் பார்த்து சோதனை…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார்…