தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஊத்துபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறியதாவது;

எங்கள் பகுதியில் சுமார் 11 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பழங்குடியினத்தைச் சார்ந்த குரும்ன்கள் இனத்தைச் சார்ந்தவர்கள்.
ஊத்து பள்ளம் முதல் குருமன்கள் கொட்டாய் வரை மண் சாலை வசதி வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், வட்டாட்சியரிடமும் பலமுறை மனு கொடுத்து அவற்றிற்கு அரசு நிதி ஒதுக்கி சாலை போட ஆணையும் வழங்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது.. இதுவரை சாலை போடவில்லை. அப்பகுதியில் வசிக்கும் எங்களில் 6 குடும்பங்களுக்கு பிரதமர் நிதியில் இருந்து வீடுகள் கட்ட ஆணை கிடைத்துள்ளது.
எனவே வீடு கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. பள்ளி குழந்தைகள் பள்ளி செல்லவும் வசதி இல்லை,உடல் நலம் சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கோ, பிறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்ல போதுமான சாலை வசதி இல்லை.
சாலை வசதி அமைக்க நாங்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் எங்கள் நிலத்தை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளோம்.

இந்த சாலை போடப்படும் வழியில் அரசு சொந்தமாக உள்ள நிலத்தை அதே ஊரைச் சார்ந்த வெங்கடேசன் மகன் அரிகிருஷ்ணன் குடும்பத்தினர் ஆக்குமளிப்பு செய்து சந்தம் கொண்டாடி வந்த நிலையில் அவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது அந்த நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே எங்கள் மனு மீது கருணை கூர்ந்து சாலையை விரைந்து போட்டு தர வேண்டும் என கூறினர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *