தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் பார்த்து சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் மூட்டைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று கடத்த முயன்ற 80 ஆயிரம் மதிப்புள்ள 12 குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த காரை ஓட்டி வந்த தேவகோட்டை அருகே உள்ள கண்ணன் கோட்டை பகுதியை சேர்ந்த செல்வகுமார்(27) மற்றும் தேவகோட்டை சந்தர்தெரு பகுதியை சேர்ந்த பாரூக்(40) ஆகிய இருவரையும் கைது செய்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *