பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறியவர்களுக்கு முதியவர்களுக்கு கொடுத்து மலர் தூவி மரியாதை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி கிராமத்தில் இன்று பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 72 ஆவது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது.

விஜயகாந்த் பெயர் பொருத்தப்பட்ட ஐந்து கிலோ எடை கொண்ட கேக் வைத்து அவர் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஐந்து கிலோ கேக்கை வெட்டி சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு என ஊர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தேமுதிக கொடியேற்றப்பட்டு கேப்டன் விஜயகாந்த் உருவம் பொறித்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முருகேசன் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர். தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் எம் கோபால். கிளைச் செயலாளர் சி முனுசாமி. கலைப் பொருளாளர் டி மகேந்திரன் இவர்கள் மூவரும் சேர்ந்து தேமுதிக கொடி ஏற்றினர். மாணவரணி துணை செயலாளர் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற துணைச் செயலாளர் டி பெருமாள். கேப்டன் மன்ற துணைச் செயலாளர். பி சரவணன். விவசாய அணி ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன். மட்டும் கிளை உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *