தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் எஸ்டி.தோமஸ் பிராண்டிங் பள்ளியில் 12வது சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழக வெற்றி கழகம் தர்மபுரி மேற்கு மாவட்டம், கிழக்கு நகரம் சார்பாக ஜெயம் யோக அறக்கட்டளையும் இணைந்து நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் தவெக கிழக்கு நகர கழக செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட நகர கழக துணை செயலாளர் கவியரசி பள்ளி மாணவர்களுக்கு இடையே யோகா பயிற்சி பற்றிய நன்மைகளை எடுத்துக் கூறினார்.

அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக யோகாசனம் செய்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *