தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ரமணி ராஜன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் பணியாற்றக்கூடிய கோவிந்தராஜ் என்பவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து வந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இவர் நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகார் மனுவில் காமராஜர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன்.இந்த பள்ளியில் தற்பொழுது தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ரமணி ராஜ் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவை தயார் செய்வதற்காக அதே பகுதியைச் சார்ந்த மூன்று பெண்கள் பணியில் சேர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவர்களில் ஒரு பெண் தலைமை ஆசிரியருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவரும் பள்ளி நேரங்களில் பள்ளிக்கூடத்திலும் மற்றும் வெளியிடங்களிலும் சென்று நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் பள்ளிக்கூடத்திற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை வந்தது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என கடந்த சில நாட்கள் முன்பு இருவரையும் கண்டித்தேன். இதனால் கோபம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் ரமணி ராஜ் அவர்கள் தூண்டுதலின் பேரில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் 15 பேர் அடியாட்கள் போல் வைத்து கடந்த ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் பள்ளி வளாகத்தில் நுழைந்து சரமாரியாக கிடைத்த பொருட்களால் தாக்கினர். இதனால் மன வேதனையில் நான் பள்ளியில் வைத்திருந்த சானிடைசர் எடுத்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த சக ஆசிரியர்கள் சேத்து தொலையட்டும் என கண்டுக்காமல் இருந்தனர்.சத்தம் கேட்டு பள்ளிக்குள் வந்த ஊர் பொதுமக்கள் கழிவறையில் மயக்க நிலையில் இருந்த என்னை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினேன்.
நான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் என்னை அடியார்கள் வைத்து அடித்த ஆசிரியர்கள் உள்பட 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
