நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் வாங்கக்கூடிய ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து கடத்தலை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் இருக்கக்கூடிய பொது மக்களுக்கு தமிழக அரசு மூலம் விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அந்த அரிசியை பெரும்பாலான பொதுமக்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவது இல்லை. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கடத்தல் கும்பல் ஒன்று அதிக விலை கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கிலோ 10 முதல் 12 ரூபாய்க்கு விலக்கி வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கக்கூடிய ரேஷன் அரிசிகளை கிராம பகுதிகளில் வாங்கி டூ வீலர் மூலம் எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் ஒட்டுமொத்தமாக ஆங்காங்கே பதுக்கி வைக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக வாங்கிய நிலையில், இரவு நேரத்தில் நான்கு சக்கர வாகனங்களில் ஒவ்வொரு இடத்திலும் எடுத்து டன் கணக்கில் அரிசி ஆலைகளுக்கும், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து குடிமை பொருள் வளங்கள், குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் பெயரளவுக்கு மட்டுமே வழக்குப்பதிவுகளை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தொடர்ந்து நடைபெற்று வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அதியமான் கோட்டை, அதியமான் கோட்டை காலனி, நல்லம்பள்ளி, ஈச்சம்பட்டி, பட்டகப்பட்டி, சிவாடி, ஒட்டப்பட்டி, தடங்கம், கக்காஞ்சிபுரம், கெங்களாபுரம் போன்ற பல பகுதியில் அதியமான் கோட்டை,இண்டூர் மற்றும் பொம்மிடி பகுதியை சார்ந்த கடத்தல் கும்பல் ஒன்று பொதுமக்களிடம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்குகின்றனர். அந்த அரிசியை 100 கிலோ முதல் ஒரு நாளைக்கு ஐந்து லோடுகளாக டூவீலரில் எடுத்துச் சென்று கிராமப் பகுதிகளில் பதுக்கி வைக்கின்றனர்.டன் கணக்கில் சேர்ந்தவுடன் நான்கு சக்கர வாகனத்தில் இரவோடு இரவாக எடுத்துச் சென்று பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். மேலும் முத்தம்பட்டி வனப்பகுதி வழியாக பொம்மிடி அருகே உள்ள குடோன் மற்றும் தர்மபுரி, நல்லம்பள்ளியில் உள்ள குடோனுக்கும் தேவைக்கேற்ப இந்த கடத்தல் கும்பல் அனுப்பியும் வைக்கின்றனர். இந்த குடோனில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து மூட்டை மூட்டையாக பொதுமக்களுக்கு கிலோ 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் கும்பல் முன்னணி அரிசி நிறுவனத்தின் பெயரில் ரேஷன் அரிசிகளை பாலிஷ் செய்து மூட்டைகளாக பிடித்து விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனால் தமிழக அரசு பொது மக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கி தனியார் அரிசி ஆலைகளுக்கும், பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களுக்கும் டன் கணக்கில் கடத்தப்பட்டு வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியும். இதன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *