பென்னாகரம் அருகே கோடுபட்டி கிராமத்தில் எண்ணெய் விதை பயிர்கள் செயலாக்கம் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர்.இதில் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக செந்தில்குமார் அவர்கள் எண்ணெய் விதை பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து கூறினார்.இப்பயிற்சியில் பெரியசாமி உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) அவர்கள் உழவர் சந்தை மற்றும் எண்ணெய் பயிர்களின் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் குறித்து கூறினார்.உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் அவர்கள் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை பூச்சி கொல்லிகள் மூலம் வேளாண்மையில் எப்படி செலவை குறைப்பது மற்றும் அதில் அதிக இலாபம் ஈட்ட வழி வகைகள் குறித்து பயிற்சி அளித்தார்.வட்டார தொழில் நுட்ப மேலாளர் அசோக்குமார் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மற்றும் உழவன் செயலி பற்றி கூறினார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கலை பிரியா மற்றும் அஸ்வினி அவர்கள் ஆட்மா திட்டம் பற்றி விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரலான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *