தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில் விவசாய விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் நிலக்கடலை மஞ்சள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாய விலை நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விலை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையினர் தங்களது பயிர் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விலை நிலங்களில் பயிர் சேதத்தையும் நடமாடும் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வனத்துறையினர் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறி விவசாயிகளின் பயிர் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வள்ளூர் கிராமத்தில் தனது நிலக்கடலை தோட்டத்தில் புகுந்த காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் ரூ 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயியின் மஞ்சள் தோட்டத்தில் காட்டுப்பன்றிகளால்ஏற்பட்ட சேதத்தினால் ரூ 30 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் எங்களது பயிர் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
