தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணமோ, பரிசு பொருட்களோ வேறு ஏதேனும் பொருட்களோ எடுத்துச் செல்கின்றனவா என்பது குறித்து வாகனங்களை சோதனை இட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செங்கனூர் அருகே உள்ள ராஜாவூர் கிராமத்தை சேர்ந்த கனகா என்பவர் இருசக்கர வாகனத்தில் கூத்தப்பாடி ஊராட்சி கே.புதூர் பகுதியில் சென்றுள்ளார்.

அப்போது பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக ரூபாய் 72500 பணம் இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக பறக்கும் படை குழுவினர் பணத்தை கைப்பற்றி பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு கருவுளத்தில் ஒப்படைத்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *