தர்மபுரி மாவட்டம் இண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நுரம்பு மண் அதிக அளவில் இரவு பகலாக கடத்தி வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கனிம வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தளவாய் அள்ளி அருகே நேரு நகர் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று நுரம்பு மணை எடுத்துச் சென்றுள்ளது.

டிப்பர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் நுரம்பு மண்ணை கடத்தி சென்றது தெரிந்தது. அதன் அடிப்படையில் டிரைவர் மற்றும் டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து இண்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன்(29) கைது செய்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *