Author: Raja

தொப்பூர் கட்டமேட்டில் மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து

தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு. கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர்…

தர்மபுரியில் ஜல்லிக்கட்டுக்கு தடை. வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை;தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் லட்சுமி நாராயணா கலைக்கல்லூரியின் பின்புறம், ஜெமினி நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வழிகாட்டுதல்படி அதியமான் ஜல்லிக்கட்டு PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் (Whats…

நல்லம்பள்ளி அருகே வீடுகளை சூறையாடும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த குரங்குகள் வீடுகளை சூரையாடி வருகின்றன. இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இருந்து தொப்பூர் வரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருநாளில் உணவு வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்

மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வரும் சேவையை தருமபுரியில் செய்து வருகின்றனர்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். கார்த்திகை தீபம் திருநாளையோட்டி திருவண்ணாமலை அருணாச்சால ஆஸ்ரமம்…

தண்டுகாரம்பட்டி ஏரியில் மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக விட்ட இளைஞர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி மற்றும் பாப்பன்குட்டை ஏரி உள்ளது.கடந்த சில நாட்கள் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக…

26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி

நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த…

தர்மபுரியில் மகப்பேறு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 45 மட்டுமே என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024…

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாதவர்களின் பெயரில் பணம் மோசடி அம்பலம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையில் நேற்று மேல் பூரிகள் பகுதியில் 141 பணியாளர்களும், அஜ்ஜிப்பட்டி பகுதியில்…

TNGOTS சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா.

தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா இண்டூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்…

பாலக்கோடு அருகே ஏற்பட்ட விபத்தில் 20 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக இன்று காலை 10 மணிக்கு பெங்களுரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, மேட்டூரை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தராசு (வயது.37) நடத்துநர் நடராஜ் பேருந்தை இயக்கி வந்தனர். பாலக்கோடு அடுத்த…