சேலத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் அவர்கள் வேலூரில் இருந்து காரில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது தொப்பூர் கணவாய் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் மகாராஷ்டிராவில் இருந்து தவிடு மூட்டைகளை கோவைக்கு ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் பின்பக்கம் பலத்த காயம் அடைந்த நிலையில் காரில் இருந்த இப்ராஹிம் மற்றும் பாதுகாவலர்கள் சிறிய காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *