தமிழ்நாடு முழுவதும் 4048 மது கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபான வகைகளை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகின்றது.

இதற்காக 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தாமல் வேறு சிலருக்கு அளித்து வந்த விவரம் முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மதுபான வகைகளுக்கு கூடுதல் கட்டணம் விதித்து அரசு விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மது வகைக்கு பெட்டிக்கு 90 ரூபாயும், பீர் பாட்டில் வகைக்கு 40 ரூபாயும், ஒயின் வகைக்கு 20 ரூபாயும் விதம் மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளில் விலைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அதே நேரத்தில் அரசுக்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *