தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மூன்று கட்டமாக போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதந்திர ஊதியத்தை ரூபாய் 10000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவு வரை எழுத்திருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை ஏய்தும் போதும் ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும் என 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 24ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இதனால் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை காவலர்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ் சங்க மாநில அமைப்புச் செயலாளர் செல்வம் தலைமையில் வழங்கப்பட்டது. இவருடன் வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி,தின்னஅள்ளி ஊராட்சி செயலர் அருள் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

