நல்லம்பள்ளி,மார்.27:தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் வருடம் வருடம் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு அதியமான் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 50 க்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வந்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் திருவிழா தொடங்கிய நிலையில் கோவில் வளாகத்தில் தேர் மிட்டாய், விளையாட்டுப் பொருள் கடைகள் போன்ற கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கோவிலுக்கு சிறப்பாக நாட்டு மாடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்த மாடுகளை வாங்குவதற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வருகின்றன. இதனால் நல்லம்பள்ளியில் நடக்க இருந்த வாரச்சந்தை அதியமான் கோட்டை காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்தையில் அதிகப்படியான நாட்டு மாட்டுகள் மற்றும் கோழி,ஆடு,எறுமை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதியமான் கோட்டையில் தேர் திருவிழா இரண்டு வாரங்கள் நடைபெறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

By pachai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *