மேல்பூரிக்கல் கிராமத்தில் ஒகேனக்கல் தண்ணீர் வராததால் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்
மேல்பூரிக்கல் கிராமத்தில் ஒகேனக்கல் தண்ணீர் வராததால் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியத அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பூரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்து பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பஞ்சாயத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி வந்தனர்.

தற்பொழுது பருவமழை சரிவர பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய தண்ணீரை முறையாக கிராமத்திற்கு வராமல் இருந்துள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *