தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் போது மக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026 ஆண்டில் நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்பொழுது பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்னாள் கவுன்சிலர் சோனியா காந்தி வெங்கடேசன் தலைமையில் நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வந்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் ரிப்பன் வெட்டி, இனிப்புகளை வழங்கி பல்நோக்கு சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஓகே.கிருஷ்ணமூர்த்தி, அன்பு கார்த்திக், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
