தர்மபுரி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்து ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இடது பக்கம் பலத்த சேதம் அடைந்த நிலையில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த 2 பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் இடர்பாடுகளை சிக்கிக் கொண்டனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து விபத்தில் சிக்கிய பெண்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 10க்கு மேற்பட்டோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது;

சேலத்திற்கும்,தர்மபுரிக்கும் பல வருடங்களாக இந்த தனியார் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்து மற்ற பேருந்துகளை காட்டிலும் அதிவேகமாக எப்பொழுதுமே செல்கின்றது. இந்தப் பேருந்து பல விபத்துகளின் சிக்கி பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கெங்களாபுரம் அருகே வந்தபோது மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது மற்றொரு வாகனத்தை கடக்க முயற்சி செய்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்களானது. உடனடியாக படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்களோ இல்லையோ, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து விபத்து நடந்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்று வரும் பேருந்துகளை மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.


தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் பேருந்து அதிவேகமாக சென்றதினால் முன்னாள் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தினால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *