தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை பல ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதினால் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த மருத்துவமனை பின்புறம் புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் அந்த கட்டிடத்திற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதை கண்டு கட்டிட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதன் பிறகு தருமபுரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்து, கட்டிட பொருள்களுக்கு நடுவில் மறைந்து இருந்த பெரிய அளவிலான சாரை பாம்பை பிடித்ததால் கட்டிட தொழிலாளர்கள் பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *