தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தில், தர்மபுரி பகுதியில் செயல்படும் கல்லூரி செல்ல மாணவி ஒருவர் நின்றிருந்தார்.அப்போது அந்த பேருந்து நிறுத்த பகுதியில் மறைந்து இருந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கல்லூரி செல்ல பேருந்திற்காக நின்றிருந்த மாணவி கழுத்தில், தங்க தாலி கட்ட முயன்றுள்ளார். இதனை அறிந்த மாணவி, இளைஞர் கட்ட முயன்ற தங்கத் தாலியை கீழே தட்டி விட்டு சத்தமிட்டுள்ளார்.

அந்த தாலியை மீண்டும், கல்லூரி மாணவி மீது வீசி விட்டு, இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவிக்கு கட்டாயப்படுத்தி இளைஞர் ஒருவர் தாலி கட்ட முயன்ற விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *