தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நூலஅள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி எருதாட்ட விழா நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் விழாவையொட்டி, நூலஅள்ளி கோயில் மண்டு நிலத்தில் எருதாட்ட விழா வெகுவிமர்சியாக நேற்று நடந்தது.
இந்த விழாவில் நூலஅள்ளி, சின்னநூலஅள்ளி, காவலைக்காரன்கொட்டாய், திருமலைகவுண்டன்கொட்டாய், சவுளூர், கொல்லக்கொட்டாய் ஆகிய கிராமங்கள் ஒன்றுகூடி போலீசார் பாதுகாப்புடன் நடத்திய இந்த எருதாட்ட விழாவில் 10 காளைகள் பங்கேற்றியது.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், இளைஞர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். இந்த விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
