பென்னாகரம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான பனைகுளம் கிராமத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி விவசாயிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை துறை யின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு.சுப்ரமணியன் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. வேளாண் துறை சார்பில் வேளாண் அலுவலர் திருமதி.தேவிகா அவர்கள் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திருமதி.கோகிலா வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குவது குறித்தும் விளக்கம் அளித்தார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.அசோக்குமார் அவர்கள் உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் மண் பரிசோதனை பற்றியும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் திரலான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
