தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது உம்மியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் இந்த கிராமத்தில் கீழ் வீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒன்றாக தேங்கி நிற்பதால் சேரும் சகதியாக மாறி உள்ளது.இந்த வழியில் வாகனத்தில் செல்வதற்கும், பொது மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமத்துடன் செல்கின்றன.தேங்கியுள்ள தண்ணீர் ஆனது துர்நாற்றம் வீசுவதின் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பலமுறை தொப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

