தமிழ்நாடு வழியாக குட்கா போதை பொருளை கடத்திச் செல்லும் கார்களால் விபத்து அபாயம்.

போதை பொருளை கேரளாவிற்கு கடத்தி சென்று கொடுத்தால் பல மடங்கு டிரைவர்களுக்கு பணம்.

தமிழ்நாடு அரசு குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் குட்கா போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்திலிருந்து கார் மற்றும் லாரிகள் மூலம் அதிகப்படியான குட்கா போதை பொருட்களை தமிழ்நாடு வழியாக கேரளாவிற்கு கடத்திச் செல்கின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லும் வாகனங்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போதை பொருள் கடத்திச் செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தும் பொழுது அதிவேகமாக கார்களை 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டி தப்பி செல்கின்றன. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வரும் பொழுது போலீசார் கடத்தல் வாகனத்தை பிடிக்க முயற்சி செய்தும் பொழுது அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்வதினால் பிடிக்க முடிவதில்லை.அதன் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் கார்களை நிறுத்தும் பொழுது நிற்காமல் அதிவேகமாக செல்கின்றனர்.

அதன் பிறகு தொப்பூர் மாவட்டத்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ள தொப்பூர் போலீசார் சந்தேகத்திற்கு இடமான கார்களை வெள்ளக்கல் சுங்கச்சாவடி பகுதியில் நிறுத்துகின்றனர். அப்படி இருந்த போதிலும் குட்கா போதை பொருளை கடத்தி வரும் கார்கள் சுங்க சாவடி தடுப்புகளை மோதிவிட்டு சர்வ சாதாரணமாக தப்பிக்க முயற்சி செய்யும்பொழுது மற்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்து நடக்கின்றது. அதேபோல் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொம்பரக்கம்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்கள் முன்பு குக்கா கடத்திச் சென்ற கார் ஷேர் ஆட்டோ மீது மோதி நிற்காமல் சென்றது.

அந்தப் பகுதி பொதுமக்கள் துரத்திச் சென்று பாளையம்புதூர் சங்க சாவடி பகுதியில் காரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த வாரம் கட்ட மேடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது அந்த கார் நிற்காமல் அதிவேகமாக வலப்புறம் இருந்த கிராமத்து சாலையில் நுழைந்து பூரிகள்,ஜருகு வழியாக அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த கார் டிரைவர் போலீசார் மீது மோதுவதைப் போல் சென்றுள்ளார். இதனால் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினர். அந்த கார் மீண்டும் வெள்ளக்கல் சுங்கச்சாவடி வழியாக கேட் 6ஆம் நம்பரில் உள்ள தடுப்பு கம்பியை மோதிவிட்டு நிர்க்காமல் சென்றது.

அதன்பிறகு அந்த கார் பஞ்சப்பள்ளி அருகே உள்ள காடு செட்டிபட்டி சாலை ஓரம் பள்ளத்தில் இறங்கியதால் காரை விட்டுவிட்டு டிரைவர் கட்டி ஓடிவிட்டார்.அந்த காரை போலீசார் மீட்டதில் 3 லட்ச ரூபாய் போதை பொருள் பிடிபட்டது.

இந்த கடத்தல் பற்றி டிரைவர்கள் கூறியதாவது;
தமிழ்நாடு அரசு பல்வேறு முறைகளில் குட்கா போதை பொருள் கடத்தி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சில மர்ம கும்பல் ஒன்று குறைந்த விலைக்கு குட்காவை வாங்கி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று பல மடங்கு லாபத்திற்காக விற்பனை செய்து வருகின்றன. ஒரு பாக்கெட் 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வாங்கி அதனை மற்ற மாநிலங்களில் 40 முதல் 60 வரை விற்பனை செய்து வருகின்றன. இந்த குட்கா போதை பொருளை முட்டு முட்டையாக தினமும் 15க்கு மேற்பட்ட வாகனங்களில் கடத்தி வருகின்றனர். குட்கா மூட்டைகளை காரில் கடத்திச் செல்லும் கார்களுக்கு கண்ணாடி முழுவதும் கருப்பு நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும், மற்றும் கண்டெய்னர் லாரிகளில் ரகசிய அறை அமைத்து அதில் கடத்திச் செல்கின்றன. மேலும் தக்காளி எடுத்துச் செல்லும் வாகனங்கள், பூ லாரிகள், உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனங்களில் பொருட்களை மேலே மறைத்து வைத்து எடுத்துச் செல்கின்றனர் .இந்த வாகனங்களை ஓட்டக்கூடிய டிரைவர்களுக்கு பவுடர் (அபின், இராயின்) முறையில் இருக்கும் போதை பொருள்களை அதிகமாக கொடுத்து வாகனங்களை 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல வேண்டும் என அனுப்பி வைக்கின்றனர்.

இவர்கள் வாகனத்தை எடுத்துச் செல்லும் பொழுது போலீசார் மற்றும் மற்ற நபர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தால் நிற்காமல் செல்ல வேண்டும்,மீறி நிறுத்திவிட்டால் பொருட்கள் சிக்காதவாறு அதிவேகமாக இயக்கி அவர்கள் மீது இடித்துக் கூட செல்ல வேண்டும். அதனை மீறி வாகனங்கள் அவர்களிடம் சிக்கினால் நீங்கள் சிக்காமல் தப்பித்துச் செல்ல வேண்டும் என கூறி அனுப்புகின்றன.

கடத்தலில் ஈடுபடும் டிரைவர்களுக்கு அதிக பணம் கொடுப்பது எப்படி;

கர்நாடக மாநிலத்தில் 50-100 பாக்கெட்டுகள் கொண்ட 15 பாக்ஸ்கள் கொண்ட ஒரு மூட்டையின் விலை 11500 ரூபாய். தோராயமாக இந்த ஒரு மூட்டையை ஓசூர் வரை தாண்டி கொடுத்தால் டிரைவர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும். கிருஷ்ணகிரியை தாண்டி கொடுத்தாள் 1500 ரூபாய், சேலத்தை தாண்டி கொடுத்தால் 3000 ரூபாய், கோயம்புத்தூரை தாண்டி கொடுத்தால் 4500 ரூபாய், மதுரையை தாண்டி கொடுத்தால் 5500 ரூபாய், இறுதியாக கேரளா மாநிலத்திற்கு சென்றால் ஒன்னரை மடங்கு அதிகமாக கொடுக்கின்றனர்.அதாவது ஒரு மூட்டை 11500 எனில் அதனை கடத்திச் சென்று கேரளாவிற்கு சென்று கொடுக்கும் டிரைவர்களுக்கு 15000 முதல் 20 ஆயிரம் வரை பணம் கொடுக்கின்றனர். இதனால் அதிக பணத்திற்கு ஆசைப்பட்ட சில டிரைவர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களை இயக்கப்படும் வியாபாரிகள் பெரும்பாலான வட மாநிலத்தைச் சேர்ந்த பெரும் வியாபாரிகள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களுக்கு துணையாக ஓசூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி ,தொப்பூர் வழியாக வரும் பொழுது இந்த பகுதியில் இருக்கும் காவலர்கள் ஒரு சிலர் இவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர் என கூறினர்.

எனவே, இது போன்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அதற்கு துணை போகும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *