தொப்பூர் அருகே
10 வருடமாக குழந்தை இல்லாததால் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்.
மனைவி தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் கலைச்செல்வி(35). இவருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பருடன் திருமணமானது. இந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக மணிவண்ணன் கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.இதனால் மனவேதனையில் அம்மா வீட்டில் இருந்த கலைச்செல்வி நேற்று வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றிய உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *