TVK பெயர் கெட்டாலும் பரவாயில்லை,
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை நியமிக்க குதிரை பேரம் நடத்தி வரும் தஞ்சம் அடைந்த மாற்று கட்சி நிர்வாகிகள்.
உண்மையான தொண்டர்கள் குமுறல்.
பொறுப்பு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா???
தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் அவர்கள் நேர்மையாகவும், வெளிப்படுத்தன்மையாகவும் இருப்போம் என சீரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற பொழுதிலிருந்து நமது கட்சியைச் சார்ந்த அடிமட்ட தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க கூடாது. கான்ட்ராக்ட் வேலைகளில் ஈடுபடக் கூடாது. அரசு திட்ட பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று கமிஷன் கேட்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் முதல் அமைச்சர்கள் வரை இணைந்து வருகின்றனர். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஒரு சிலர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வசூல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 14 அரசு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடங்களில் போக்குவரத்து தொழிற்சங்கம் மற்ற கட்சிகளில் ஏற்கனவே இருந்து வருகின்றது. புதியதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் எதுவும் இல்லை. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தொழிற்சங்கங்களை உருவாக்கி போக்குவரத்து தொழிலாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடலாம் என முடிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து 5 லட்சத்திற்கும் குதிரை பேரம் நடந்தது. இதனை அறிந்த மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு நான் சங்க நிர்வாகியாக வருவதற்கு நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் ஒரு போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 5 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் நாங்கள் 15 லட்சம் கொடுக்கிறோம் என கூறியுள்ளனர்.
இதனால் பண போதையில் சுற்றித்திரிந்த ஒரு சிலர் அதனை வாங்கிக் கொண்டு பொறுப்புகளை மாற்றிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் 14 போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திற்கு பொறுப்பாளர்களை நியமித்தால் 2 கோடிக்கு மேல் கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமான ஆடியோ இணையதளத்தில் பரவி வருவது உண்மையான தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது;
பென்னாகரம் பகுதியைச் சார்ந்த ராமன் என்பவர் பென்னாகரம்-ஓசூர் வழியாகச் செல்லும் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணியில் இருந்த பொழுது அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அப்போது இருந்து அரசு போக்குவரத்து கழகத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை நன்கு அறிந்தவர். இதனால் தற்போது தவெகாவில் இணைந்து பொறுப்பாளராக வந்தால் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என முடிவு செய்து தவெக தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய மனதை மாற்றிவிட்டார்.

அதனால் தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் இவருக்கு மண்டல செயலாளராக பதவி வழங்கியதாக கூறி அனைத்து பகுதிகளிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். 14 கிளைகளிலும் நான் சொல்பவர்கள் தான் பொறுப்பிற்கு வர முடியும் எனக் கூறி, ஒவ்வொரு சங்கத்திற்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் எனக் கூறி 2 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்து ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க கூடாது என கூறி தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளனர். அப்படி இருக்கும் பொழுது மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ராமன் மற்றும் அவரை சார்ந்த நபர்கள் ஒன்றிணைந்து தாவெகாவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் உண்மையான தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிகப்படியான பணம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பு வழங்கப்படும் என குதிரை பேரம் நடந்து வருகிறது.
ஏற்கனவே 5 லட்ச ரூபாய் கொடுத்தால் பொறுப்பு வழங்கப்படும் என பணத்தை வசூல் செய்த நிலையில், அதற்குப் போட்டியாக அதிக பணத்தை கொடுப்பவர்களுக்கு பொறுப்பு வழங்குவதாக கூறி, ஏற்கனவே கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கொடுத்த சம்பவமும் அரங்கேறி வருகிறது.

பணத்தை கொடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக வருபவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி மாறுதல் மற்றும் பல்வேறு பணிகளுக்காக செல்பவர்களிடம் பணத்தை வசூல் செய்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க உள்ளனர்.
நாளை தர்மபுரி பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த தர்மபுரி பொறுப்பு அமைச்சரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் சுற்றுப்பயணம் வருகிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி போக்குவரத்து கழக சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பல கோடி ரூபாய் வசூல் செய்து வரும் ராமன் என்பவரை உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தர்மபுரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணத்தைக் கொடுத்து பொறுப்பாளராக வருபவர்கள் லஞ்சத்தில் தலைவிரித்து ஆடுவார்கள். இதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நேர்மைக்கும் களங்கம் ஏற்படவும் வாய்ப்பு அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக தர்மபுரிக்கு வருகை தரவுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க கோடிகளை வசூல் செய்யும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உண்மையான தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு குதிரை பேரம் குறித்த ஆடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
