மக்கள் மேடை புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்
மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த இயக்கம் “மக்கள் மேடை” என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கி இருப்பதாகவும், மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும்,லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் என கூறியுள்ளார். இயக்கத்தில் சேருவதற்காக தனி மொபைல் என்னும் அறிவித்துள்ளார்.
7550080515 என்ற மொபைல் எண்ணும் makkamedaitn12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிமுகம் அறிமுகம் படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:
சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற எங்கள் இயக்கத்தில் சேரலாம்.பெருமக்கள் சேவைக்காக மக்கள் சக்தியாக உருவாக்கி, இந்த சமூகத்தின் பல நன்மைகளை செய்ய முன் வாருங்கள்,ஒன்றாக சேருவோம், ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வோம்,மூத்த குடிமக்கள், ஐஏஎஸ் ,ஐபிஎஸ் ,அரசு அதிகாரிகள் ,ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களோடு தொடர்பு கொண்டு இந்த தமிழ்நாட்டிற்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம்.உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *