தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்கள் இலவசமாக நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து அட்டை பெறுதல் மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், அரசு திட்டங்களை எவ்வாறு கட்டுமான தொழிலாளர்கள் பெறுவது ஆகிய ஆலோசனைகளை இந்த அலுவலகத்தின் மூலம் பெறலாம். இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த அலுவலகத்தை இன்று காலை 10 மணிக்குமேல் காணொளி காட்சி வாயிலாக, சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார். இந்த அலுவலக திறப்பின்போது கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தி.மு.கவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கட்டுமான பணியை, தமிழ்நாடு முழுவதும் ஒருவர் மட்டுமே டெண்டர் எடுத்து, கட்டுமான தொழிலாளர்கள் நலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு நல்லம்பள்ளியில் இந்த அலுவலகத்தை அமைத்த ஒப்பந்ததாரர், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் யாரையும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது ஒப்பந்ததாரர் கமிஷன் கொடுக்காத காரணத்தால், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கட்டுமான தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியை, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
