தவெகவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் நிர்வாகிகள் பதவி வழங்க பல கோடி வசூல் தொழிலாளர்கள் குமுறல் .

தர்மபுரி மாவட்டத்தில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும் 300 முதல் 350 வரை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் அரசியல் கட்சியை சார்பில் தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழக வெற்றி கழகம் ஆளுங்கட்சி என்பதால் அனைத்து அரசு போக்குவரத்து கழகத்திலும் கட்சியைச் சார்ந்து தொழிற்சங்கங்கள் உருவாக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தலைமை நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவர் சங்க நிர்வாகியாக தேர்வு செய்வதற்கு பல லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது பற்றி போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது;
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒவ்வொரு இடத்திலும் 40 முதல் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போக்குவரத்து தொழிற்சங்கம் உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதிவுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மாவட்ட செயலாளர் தூண்டுதலின் பேரில் ஓய்வு பெற்ற பணியாளர் ராமன் என்பவர் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை வசூல் செய்து வருகின்றனர். யார் முன்கூட்டி வந்து பணத்தை கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இதுவரை பல கோடி ரூபாய் வசூல் செய்தும் வருகின்றனர். இதில் முக்கிய பங்கு வகிப்பவர் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் அனைவரிடமும் பணத்தை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு தொழிலாளர் சங்கத்தில் பதவியை வாங்கிக்கொண்டு பணி மாறுதல் செய்வதற்கு பல லட்சம் ரூபாயை லஞ்சமாகவும் பெறுவதற்கு திட்டம் திட்டி வருகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும் உதவி செய்து வருவது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்,பதவிக்கு வரும் நிர்வாகிகள் ரூட் மாற்றிக் கொடுக்க வேண்டும் என கேட்கும் பணியாளர்களிடம் இருந்து 50,000-1,00,000 வரை வசூல் செய்து கொள்வார்கள் என புலம்பி வருகின்றனர்.

எனவே புதியதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேபோன்று தமிழக வெற்றி கழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நேர்மையாக செயல்பட்டு, பொது மக்களுக்கு சேவை நோக்கத்தில் பணியாற்றிட வேண்டும், தவறு செய்யும் பட்சத்தில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் சூழலில் மாற்று கட்சியை சார்ந்த நிர்வாகிகளுக்கு, தவெக அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு கோடிகளில் பணத்தை வசூல் செய்வதால் தவெக விற்கு கழகத்தை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது தமிழக வெற்றி கழகம் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா என தொண்டர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *