தர்மபுரி
சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதி இருந்து வந்தது. 1965இல் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரியை மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தர்மபுரி 1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,1971ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 2008ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2019ஆம் ஆண்டு சிறப்பு தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தர்மபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், 23 உள்வட்டங்கள், 470 வருவாய்க் கிராமங்கள் உள்ளது.மேலும் இரண்டு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும், 10 ஊராட்சி ஒன்றியங்களையும், 251 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.
இங்கு பட்டுப்பூச்சி வளர்ப்பு, சிறந்த தொழிலில் ஒன்றாக விளங்கி வருகிறது. கல்வியில் முன்னேறும் மாவட்டமாகவும் இடம்பிடித்து வருகிறது.
ஆட்சியர்கள் விவரம்
தற்போது இந்த மாவட்ட 47வது ஆட்சியராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இருந்த ஆட்சியர் ரெ.சதீஷ் வீடுகள் இல்லா தமிழர்களின் மறுவாழ்வு மையத்தின் இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
சு.மலர்விழி இ.ஆ.ப அவர்கள் 26.02.2018 முதல் 29.10.2020 வரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்பொழுது பொதுமக்களிடம் இயல்பான முறையில் பேசுவதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து காட்டினார். அரசுத்துறை அதிகாரிகளிடம் இயல்பான வார்த்தைகளால் பேசி திறன் பட தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தை செயல்படுத்தினார்.

——————————————————————————————
S. திவ்யதர்ஷினி இ.ஆ.ப அவர்கள் 19.05.2021 முதல் 15.06.2022 வரையில் தருமபுரி மாவட்ட ஆட்சியராக சீரும் சிறப்பான நேர்மையான அதிகாரியாக செயல்பட்டார்.
தி. சாந்தி இ.ஆ.ப அவர்கள் 16.06.2022 முதல் 03.02.2025 வரையில் மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட போது சாதாரண அரசு அதிகாரிகள் போன்று இயல்பான முறையில் செயல்பட்டு திறன் பட நிர்வாகத்தை நடத்தினார்.

——————————————————————————————
ரெ.சதீஷ் இ.ஆ.ப அவர்கள் 03.02.2025 முதல் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிய நிலையில் தற்பொழுது பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டும்தான் தர்மபுரி மாவட்டத்தை முதன்முறையாக ஆட்சி செய்வதை போன்றும், வானத்திலிருந்து குதித்த மாவட்ட ஆட்சியரை போன்றும் செயல்பட்டு வந்ததாக அரசுத்துறை அதிகாரிகளே புலம்பி வந்தனர்.

அரசுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக 40க்கு மேற்பட்டோர் வந்து திறன் பட நிர்வாகத்தை நடத்தி வந்தனர். அவர்கள் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை புகாரை வந்ததை அடுத்து உடனடியாக அதை நிவர்த்தி செய்து கொடுத்தனர். அரசு அதிகாரிகளிடம் உரிய மரியாதை உடன் நடந்து கொள்வார்கள். ஆனால் ரெ.சதீஷ் மாவட்ட ஆட்சியரை போன்று இதுவரை யாரும் நடந்து கொண்டதில்லை. அரசு அதிகாரிகளை பார்த்தால் இவருக்கு ஏதோ தின கூலிக்கு வந்தவர்களைப் போன்று என்னா,யோ, வா, போ, என்னத்துக்கு வந்த,மண்டையில் என்ன இருக்கு, உனக்கு மூளை இருக்கா இல்லையா இது போன்று அரசு அதிகாரிகளை பேசுவது இவருடைய பழக்கம் என கூறுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது;
தற்போது இருந்த மாவட்ட ஆட்சியர் தன்னை ஒரு மன்னர் போன்றும் ,நான் மட்டும்தான் இங்கு அரசன் என்ற நினைப்பில் சுற்றி வந்தார். ஆட்சியரின் வெளித்தோற்றத்தை மட்டுமே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் பணியில் சீரும் சிறப்புமாக ஆட்களை வைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தார். தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை உடனுக்குடன் செய்வதற்கு அவருக்கு நிழலாக இருந்த சேலம் பகுதியைச் சேர்ந்த டிரேட் கம்பெனியை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பொய்க்காவலராகவும்,பணம் காவலராகவும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிக்கும் மாவட்ட ஆட்சியரின் பொய்காவலர்கள் கண்டிப்பாக அவருடன் இருப்பார்கள். மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறாரோ இல்லையோ, ஆட்சியரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது இந்த டிரேடு கம்பெனியின் முதல் வேலையாகவே இருக்குமாம்…..
மாவட்ட ஆட்சியரின் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டூ வீலர் பார்க்கிங் ஏரியா குடியல் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இந்த பணியையும் சேலம் டிரேட் குரூப் செய்து வருவதாக தெரிகிறது…
தர்மபுரி டவுன் பகுதியில் மிகவும் பிரதான சாலையில் வண்ண சுருள் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுருள் விளக்குகள் அனைத்தும் சேலம் டிரேட் கம்பெனிக்கு தான் மாவட்ட ஆட்சியர் விட்டுள்ளார். இந்த வண்ண சுருள் விளக்கு ஒன்று 10,000 விதம் பில் போட்டு அந்தந்த ஊராட்சியில் பில் எடுத்துள்ளனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் சுமார் 10 லட்சம் வரை பில் போட்டதால் பல கோடி ரூபாய் வருவாய் டிரேட் கம்பெனி மூலம் மன்னருக்கு கிடைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மாவட்ட மன்னருக்கு வேறு மாவட்டத்தில் 20 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக கொடுத்ததாகவும் பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.
——————————————————————————————
திவ்யதர்ஷினிஅவர்கள் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது சில அரசியல் பிரமுகர்கள் அரசு வேலைகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்குத்தான் அந்த வேலையை போட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். ஆனால் அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் நீங்கள் சொல்பவர்களுக்கு என்னால் பணி ஆணை வழங்க முடியாது, தகுதி உள்ளவர்களுக்கு தான் பணி ஆணை வழங்க முடியும் என கண்டிப்புடன் தெரிவித்தார். அதனால் அவர்களுக்கு பணி மாறுதலை சில அரசியல் தலையீடு இருந்துள்ளது. இதனால் அந்த நேர்மையான மாவட்ட ஆட்சியர் பணி மாறுதல் பெறுவதற்கு முன்பு ஒரே நாளில் தகுதி உள்ள சுமார் 20 க்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு வேலைக்கு ஆணையிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் மனதிற்கும் பிடித்த நேர்மையான மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி அவர்கள் திகழ்ந்து வருகிறார்.

——————————————————————————————
இந்த சேலம் டிரேட் குரூப் தான் ஊராட்சி பணிகளுக்கு தேவையான பொருள்களை வழங்க வேண்டும் எனவும் வாய்மொழி உத்தரவு தற்போது பிறப்பித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது…
தர்மபுரி மாவட்டத்தை சிறப்பாக நிர்வாகித்த மாவட்ட ஆட்சியர்கள் பிடித்த இடத்தை பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மனதில் இருக்கும் இடங்கள்:

1. S.திவ்யதர்ஷினி இ.ஆ.ப
2. சு.மலர்விழி இ.ஆ.ப
3. கி.சாந்தி இ.ஆ.ப
Source: social media,public
