filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0001,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.33706364, 0.4807858);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 183.73672;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 43;

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அனுமதியின்றி கண்டைனர் லாரியில் மாடுகளை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் வழியாக வந்தது. இந்த கண்டெய்னர் லாரி, நல்லம்பள்ளி அடுத்த குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று வந்தது.இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் செந்தில்(40) இந்த லாரியை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு நிறுத்தி பார்த்துள்ளார். அப்போது அந்த கண்டெய்னர் லாரியில் 27 மாடுகளை எவ்வித அனுமதியின்றியும், சிறுஇடைவெளி இல்லாமல் அடைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார், கண்டெய்னர் லாரியில் 27 மாடுகளை எவ்வித அனுமதியும் இல்லாமல் அடைத்து கொண்டு வந்த, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாத்(33), ஸ்ரீனிவாஸ்(48) உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், 27 மாடுகளை மீட்டு, எருமையாம் பட்டி பகுதியில் உள்ள கோசாலையில் போலீ்சார் ஒப்படைத்தனர். பின்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு, யாருக்காக இந்த மாடுகள் கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *