நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் சுங்க சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் நின்றதினால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள வெள்ளக்கல் குறிஞ்சி நகர் பகுதியில் சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவடி வழியாக தர்மபுரி-சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களும், சேலம்-தர்மபுரி மார்க்கமாக செல்லும் வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகிறது. நேற்று பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காகவும், ஒரு சிலர் பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டதாலும் அதிக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதன் காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் செல்வதினால் தர்மபுரி செல்லும் சுங்க சாவடி பாதையில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நீண்ட வரிசையில் நின்றது. இதன் காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாக சென்றது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


