தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஓட்டி நகை கடை ஒன்று உள்ளது. இன்று அக்ஷய திருதியை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து நகை கடை உரிமையாளர் மேளதாளங்கள் மற்றும் ஆடியோ பாடல் வைத்துள்ளனர்.
சுப நிகழ்ச்சி நடப்பது போல் டிராமா நடத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி முகவர்கள், கட்சியினருக்கு பட்டப் பகலில் பண பட்டுவாடா நடப்பது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் படி,
தேர்தல் பறக்கும் படை குழு தலைவர் புகழேந்தி தலைமையில் துணை ராணுவ பறக்கும் படையினர் நல்லம்பள்ளி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் அலுவலகத்தில் சோதனை நடத்துவது போல் உள்ளே சென்று விட்டு எந்தவித சோதனையும் நடத்தாமல், 3 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பணபட்டுவாடா குறித்து ரகசிய தகவல் அளித்தாலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு கரிசனம் காட்டி சென்றது மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மீது நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.
ஆளுங்கட்சி தரப்பிற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகழேந்தி கரிசனம் காட்டி சென்றது ஏன் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாக நடக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பறக்கும் படை குழுவினர் பொதுமக்கள் அளிக்கும் ரகசிய புகாருக்கு உரிய நடவடிக்கையை பாரபட்சமின்றி எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
