மை தருமபுரி அமைப்பின் சார்பாக தினந்தோறும் பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வரும் சேவையை தருமபுரியில் செய்து வருகின்றனர்.பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். கார்த்திகை தீபம் திருநாளையோட்டி திருவண்ணாமலை அருணாச்சால ஆஸ்ரமம் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு மை தருமபுரி அமைப்பினர் கலந்து கொண்டு பல்லாயிரம் கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கினர். மை தருமபுரி அமைப்பின் உணவு சேவையை பாராட்டி ஆசிர்வாதம் வழங்கினார் அருணாச்சலா ஆசிரமம் பரமானந்தா சுவாமிகள் அவர்கள். அன்னதான சேவையை மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், அருள்மணி, கிருஷ்ணன், தருமபுரி மாவட்ட எண்ணங்களின் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், சாரதி ஆகியோர் உணவு வழங்கினர்.
