தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தின் இணைக்க கோரி மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலின் பேரில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி (புதன்கிழமை) தற்செயல் விடுப்பு எடுத்து மாநில முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான பெருந்திரள் முறையிட்டு இயக்கம் நடத்தப்பட உள்ளது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செயலாளர்,பொருளாளர் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

