தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் 29 மெட்ரிக் டன் காய்கறிகள், 2000 கிலோ பழங்கள், மொத்தம் 31 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் 125 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூபாய் 12 லட்சத்து 9381 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த உழவர் சந்தைக்கு வந்து 6294 நுகர்வோர் வாங்கிச் சென்றனர் .

தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி கிலோ 20, கத்திரிக்காய் கிலோ 26,பீக்கன் கிலோ 15, புடலங்காய் கிலோ 22 ,பாகற்காய் கிலோ 45 ,முள்ளங்கி கிலோ 8 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தக்காளி 6 ரூபாய்,கத்தரி 19 ரூபாய்,வெண்டை 14 ரூபாய், புடலங்காய் 4 ருபாய், பாகல் 9 ரூபாய்,
முள்ளங்கி 8 ரூபாய் வீதம் விலை குறைந்துள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *