தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பருவதன ஹள்ளி ஊராட்சி ,செங்கனூர் ஊராட்சி, மாங்கரை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சேவை மைய கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அரசு துறைகளான தமிழ்நாடு மின்சார வாரியம் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பால்வளத்துறை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளில் பொதுமக்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர் இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாயத் தலைவர்கள் ஊராட்சி செயலாளர்களும் மற்றும் கவுன்சிலர்களும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பொதுமக்களும் என ஏராளமானோர் இம்முகாமில் கலந்து கொண்டனர்

