தர்மபுரி மாவட்டம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா ஆகியவற்றை வழங்கி வந்தார். அதேபோன்று நடைபெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் பொது மக்களுக்கு அன்னதானம், தென்னங்கன்றுகள், புடவைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சிக்காக தனது காரில் தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரி உழவர் சந்தை அருகே சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த டூவிலர் நாய் குறுக்கே வந்ததின் காரணமாக நிலை தடுமாறி டூவீலரில் வந்தவர் கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்து சாலையிலே இருந்தவரை தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் அவர்கள் மீட்ட போது கடகத்தூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது காரில் அழைத்துச் சென்றார். அதன் பிறகு மருத்துவர்களை அழைத்து இவருக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றார்.

முழுமையான வீடியோவை பாருங்கள்:

👇👇👇👇👇👇👇👇👇


சாலையில் அடிபட்டு கிடந்த நபரை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றுள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *