தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பொப்பிடி அரசு உயர் நிலைப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாள் விழா உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பாமக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏழு குண்டன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பாமர ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக போராடியது குறித்து மாணவர்களிடயே எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டடு, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பாமக ஒன்றிய துணைத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் முருகன், பாமக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *