தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை உற்சாமுகடன் ஆற்றினர்.

முன்னதாக இந்த வாக்கு சாவடி மையத்தில் முதலில் வந்து வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பல்வேறு வேலைபாடுகளுக்கு இடையில் காலையிலேயே வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றிய தொழிலதிபரும்,ரத்னா குழும நிறுவனர் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மாதுலட்சுமி மரக்கன்று வழங்கி கவுரவித்தார். உடன் அன்புகார்த்திக், செந்தில் மற்றும் ஜனநாயக கடமை ஆற்றிய பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *