தர்மபுரி சட்டமன்ற தொகுதியில்,
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க கட்சியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தர்மபுரி சட்டமன்ற தொகுதி முழுவதும் அவர், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் இளங்கோவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கும் போதும், மக்களிடம் வாக்கு சேகரிக்க செல்லும்போதும், திமுக கட்சியினர் அவருக்கு வரவேற்பு கொடுப்பதில் சுனக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் தர்மபுரி தொகுதியில் திமுக கட்சியைச் சார்ந்த ஒருவருக்கு கட்சித் தலைமை சீட் ஒதுக்கி தராததால், இதன் விரக்தியை கட்சி தலைமை,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ள, தேமுதிக வேட்பாளரிடம் வெறுப்புகளை காட்டி வருகின்றனர். இதனை அறிந்த தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் எப்படியாவது, தர்மபுரி தொகுதியில் தான் வெற்றி பெற வேண்டும் என வயது முப்பையும் கடந்து, சட்டமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், பாமக கட்சியை சேர்ந்த சௌமியாவுக்கு, தர்மபுரி சட்டமன்ற தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அவர் ஏற்கனவே தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால், தற்போது தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள சௌமியாவை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என, பாமக கட்சியினர் மட்டுமல்லாமல் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் முழு வீச்சில் தேர்தல் பணி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் சுனக்கம் காட்டிடும் ஒரு சில திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் யார் என்பதை பாமக மற்றும் அதிமுக கட்சியினர் லிஸ்ட் எடுத்துக் கொண்டனர். தற்போது அந்த திமுகவினரை தாபா ஹோட்டல்கள், ரகசிய இடங்களில் வரவழைத்து பாமக, அதிமுக கட்சியினர் டீல் பேசி வருவதாகவும், இந்த டீலில் தேமுதிக வேட்பாளருக்கு எதிராகவும், பாமக வேட்பாளருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணி செய்யக்கோரி கட்சியை அடகு வைத்து டீலுக்குள் வந்த திமுகவினரிடம், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருவதாக திமுக கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக நமக்குத்தான் திமுக கட்சி தலைமை சீட்டு ஒதுக்கும் என்று மெதப்பில் இருந்த சிலருக்கு சீட்டு கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சியில் தேமுதிக வேட்பாளருக்கு தர்மபுரி தொகுதியை ஒதுக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத சில திமுக நிர்வாகிகள், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு முறையாக தேர்தல் பணி செய்யாமல், ஏதோ தி.மு.க கட்சி தலைமை அறிவித்து விட்டதே என்பதற்க்காக பெயரளவிற்க்கே தேர்தல் பணியை சில திமுகவினர் மேற்கொண்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகளை தேமுதிகவினர் எழுப்பி வருகின்றனர்.

திமுக நிர்வாகிகளுக்கு தான், தலைமை சீட்டு வழங்கவில்லையே, எதிர்க்கட்சியை சேர்ந்த பாமக வேட்பாளரையாவது தர்மபுரி தொகுதியில் வெற்றி பெறட்டும் என எண்ணிய சில திமுக நிர்வாகிகள், எதிர்கட்சியினர் கூறிய டீலுக்கு சமரசமாகியதால்,தேமுதிக வேட்பாளருக்கு, சில திமுகவினர் தேர்தல் பணியாற்றாமல் இருந்து வருவதாக அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பரவலாக பேசி வருவதுடன், திமுக கட்சி தலைமைக்கு கோரிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

“குறிப்பாக; திமுக ஆட்சிக்காலத்தில் அரசு ஒப்பந்த பணிகளை, திமுக முக்கிய பொறுப்பாளர்கள் தனது சுய லாபத்திற்காக திமுக கட்சியை சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்காமல், பாமக,அதிமுக உள்ளிட்ட கட்சியினர்களுக்கு பணி வழங்கிய, திமுக நிர்வாகிகள் தான் தற்போது திமுக கட்சியை அடகு வைத்து டீல் பேசும் பணியில் தலைமை வகிப்பதாக தகவல் பரவி வருகிறது”

திமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல், எதிர்க்கட்சியினர் கொடுக்கும் பல லட்சம் ரூபாய் டீலுக்காக கட்சியை அடமானம் வைத்துள்ள, திமுக நிர்வாகிகள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தருமபுரி தொகுதியை தேமுதிக கைப்பற்றும் என அடிமட்ட தொண்டர்கள் இவ்வாறு புலம்பிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *