மானியதன அள்ளி ஊராட்சியில்
100 நாள் வேலைக்கு செல்லாத மூதாட்டி வங்கி கணக்கில் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்த சந்திரகாந்த் மனைவி சத்யா மீது நடவடிக்கை எடுக்க மூதாட்டி புகார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானியதன அள்ளி ஊராட்சியில் மேல் பூரிக்கல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மூதாட்டி செவத்தால்(80) என்பவர் வயதான காரணத்தினால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லாத நிலையில், மூதாட்டி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைத்து நூதன முறையில் மோசடி செய்து பணத்தை எடுத்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று மனு கொடுத்துள்ளார்.


அந்த மனுவில், எனக்கு எழுத படிக்க தெரியாது கைரேகை தான் எனக்கு வைக்க தெரியும். என் பெயரில் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் அட்டை ஏற்படுத்தி உள்ளனர். ஜருகு மனித அள்ளி 9வது வார்டு உறுப்பினர் சந்திரகாந்த் மனைவி சத்யா. ஆனால் நான் எப்போதும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிக்கு செல்லாமல் வீட்டில்தான் இருப்பேன். இந்த நிலையில் மனியதனஅள்ளி பல்லவன் வங்கியில் இருந்து முதியோர் உதவித்தொகை எனது வீட்டிற்கு வந்து வழங்குவார்கள். அவர்களுடன் 9வது வார்டு உறுப்பினர் சந்திரகாந்த் மனைவி சத்யாவும் வருவார். எனக்கு முதியோர் உதவித்தொகை வந்துள்ளதாக கூறி இயந்திரத்தில் கைரேகை பெற்றுக் கொள்வார்கள். பின்னர் தான் எனக்கு தெரிய வந்தன தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் என் பெயரில் வங்கி கணக்கில் பணத்தைப் போட்டு அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர். பின்னர் அவர்களே என் வங்கி கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துக் கொண்டுள்ளனர். என்னுடைய வங்கி கணக்குக்கு விவரங்களை பார்த்த போது தான் என் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி பணத்தை கையாடல் செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வேண்டும் என உள்ளது.

வயதான மூதாட்டி 100 நாள் வேலை திட்டத்தில் அட்டை மட்டுமே பெற்ற நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மூதாட்டி வேலைக்கு செல்லாத நிலையில் வேலைக்கு வந்தது போன்று கணக்கு வைத்து, அதற்குண்டான பணத்தையும் வங்கி கணக்கில் வரவு வைத்து,அந்த பணத்தை நூதன முறையில் மோசடி செய்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *