தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வசித்து வரும் +2 மாணவர் ஒருவர் சினிமா வசனம் அடங்கிய ரீல்ஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இந்த ரீல்சை பார்த்த கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பிளஸ் டூ மாணவர்கள் தைரியமாக இருந்தால் தடங்கம் மேம்பாலம் அருகே நேரில் வருமாறு கூறியதாக தெரிகின்றது.

அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை வந்துள்ளனர். அப்போது இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது பிளஸ் டூ மாணவர்கள் தப்பி ஓடிய நிலையில் கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் பிடித்து வழக்கு பதிவுசெய்து, தப்பி ஓடிய +2 மாணவர்கள் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

சினிமா ரீல்சை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பிளஸ் டூ மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *