பண்ட அள்ளி பகுதியில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மாற்றி அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ட அள்ளி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. பண்ட அள்ளி சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 35க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயில் சுவர் உடைந்த நிலையில் உள்ளதால் இரும்பு கேட் திறக்கும் பொழுது சுவர் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

பள்ளி நேரங்களில் மாணவர்கள் வளாகத்தில் இருக்கும் பொழுது சுற்று சுவர் மற்றும் இரும்பு கேட் விழுந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பருவமழை பெய்து வரும் நிலையில் சுற்று சுவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும்.இதனால் சுற்று சுவரை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.


இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடும் பொழுது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சுற்றுச்சுவரை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *