தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது சேசம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி கோவில் உண்டியலில் பணம் திருட நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார்.
எப்போது உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கை உண்டியலில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேரமாக உண்டியலில் இருந்து கையை எடுப்பதற்காக முயற்சி செய்தும் முடியவில்லை.
இதனால் விடிய விடிய உண்டியலில் கை மாட்டிய நிலையில் திருடன் அங்கேயே இருந்தார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் உண்டியல் அருகே கைமாட்டிய நிலையில் நபர் ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த அதியமான் கோட்டை போலீசார் திருடனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு நடத்திய விசாரணையில் சவுலூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ்(43) என்பது தெரிந்தது. அதன்பிறகு இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
