சாமிசெட்டிபட்டியில்
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் பேசும்போது இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா மருத்துவ ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள். அவருடைய பிறந்தநாள் அன்று யாரும் கேக் வெட்டி கொண்டாட கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அதன் காரணமாக நாங்கள்  அய்யாவின் பிறந்தநாள் அன்று மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். இந்தப் பள்ளியில் இருக்கும் பெரிய மரங்கள் அனைத்தும் நான் அவ்வப்போது விழா காலங்களில் வந்து நட்டு வைத்த மரங்கள். அதேபோன்று நீங்களும் உங்கள் பிறந்த நாளன்று ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றாவது நட வேண்டும் என அறிவுரை கூறினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் காமராஜ், டோக்குபோதனா அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பழனி அறிவு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் காமராஜ், ஊராட்சி துணைத்தலைவர்கள் நாகலிங்கம், மாயக்கண்ணன்,ஆசிரியர் அமுதா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்.

முழுமையான வீடியோவை பாருங்கள்:

👇👇👇👇👇👇👇👇

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *