தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவிலில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டப்பட்டு பொது மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் கே கே முருகன் தலைமை தாங்கினார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு வேட்டி சேலை மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கினார். கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், சின்னசாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர், ராஜலிங்கம் கவுன்சிலர், பசுவராஜ் முன்னாள் ஒன்றிய செயலாளர், செந்தில், சங்கர் கோவில் முருகேசன், வெங்கடாசலம், வெங்கடேஷ் வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர், ஞானசேகர், நந்தகுமார், கே எம் பி பழனி, ஜீவமணி, நாகராஜ், டிஆர்எஸ் ராஜா, பெரியண்ணன், டெம்போ சின்னசாமி, தங்கவேல், சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே கே முருகன் மாவட்டத் துணைத் தலைவர் செய்திருந்தார்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *