தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த காரை அதே சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் முன்னாள் சென்ற கார் சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான காரை பார்த்தபோது கார் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் கடத்த முயன்ற விவரம் தெரிந்தது. இதனால் அந்த காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது 40 மூட்டைகள் கடத்த முயன்ற விவரம் தெரிந்தது. இதனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த டிரைவரையும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மற்றொரு காரையும் தொப்பூர் போலீசார் தேடி வருகின்றன.
பொதுமக்கள் பேசும் விபத்துக்கான காரணம்:
தொப்பூர் காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து குட்கா கடத்திச் செல்லும் கார்கள் அதிவேகமாக செல்வதினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு குட்கா பொருட்களை கடத்திச் செல்லும் கார்களை நோட்டமிடும் மர்மகும்பல் ஒன்று துரத்திச் சென்று மடக்கி பிடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றன. அவ்வாறு பிடிக்க முடியாத வாகனங்களை போலீஸாரிடம் மாட்டி விடுகின்றன. இல்லையென்றால் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே இடித்து விபத்துக்களை ஏற்படுத்துவது நடந்து வருகின்றது. அதேபோன்று நேற்று மாலை பெங்களூரில் 40 மூட்டைகளை ஏற்றிய கார் ஒன்று சேலத்தை நோக்கி சென்றுள்ளது. அந்த காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்ப கும்பல் ஒன்று காதிலேயே தொடர்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காரை மடக்கிய போது கடத்தல் கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் குட்கா கடத்திச் சென்ற கார் தப்பித்துக் கொள்ள தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திரும்பி சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றுள்ளது.இதனால் அந்த காரை மர்ம கும்பல் துரத்தி தொப்பூர் போலீஸ் கோட்ரஸ் அருகே வரும்பொழுது பின்னால் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வந்ததின் காரணமாக விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் தொழில் போட்டியின் காரணமாக விபத்தை ஏற்படுத்தினரவா அல்லது பணம் பறிக்கும் நோக்கத்தில் நடைபெற்ற விபத்தா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.
