தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி ரயில்வே கேட்டு அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனம் தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதினால் போலீசார் துரத்திச் சென்று நல்லம்பள்ளி அரசு பள்ளி அருகே மடக்கி பிடித்தனர். அதன்பிறகு காரின் உள்ளே பார்த்தபோது இரண்டு அடி உயரம் கொண்ட மரப்பெட்டி இருந்துள்ளது. இது பற்றி போலீசார் கேட்டதற்கு காரில் இருந்த மூன்று பேரும் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் போது பூதனஅள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வீட்டில் ஒரு சிறிய சில்வர் குடத்தின் மீது பிளாஸ்டிக் மோல்டு செய்து இரிடியும் கலசம் போன்று தயார் செய்ததாகவும். அதனை கொல்லிமலை பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (30), ஓசூர் சுடாபுரம் பெரிய நகர் பகுதியில் சேர்ந்த மாணிக்கம் (53), இவரது மகன் முகேஷ் முரளி(26) ஆகியோர் சேர்ந்து காரில் பெங்களூருக்கு கடத்த முயன்ற விவரம் தெரிந்தது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

